திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சிறிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

இதன்படி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி அறிவிப்பை வெயிளிட்டுள்ளது.
கன்னியாகுமரியில் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் 37 கோடி ரூபாய் செலவில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இதேபோன்று நெல்லை மற்றும் கன்னியாகுமரியிலும் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் தலா 37 கோடி ரூபாய் செலவில் மினி டைட்டில் பூங்காக்கள் கட்டப்படவுள்ளன.
ஒவ்வொரு டைடல் பூங்காவிலும் 500 முதல் 1000 தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், பெருநகரங்களை நோக்கி இடம்பெயர வேண்டிய நிலை குறைந்து உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தின் பல சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் இந்த மினி டைடல் பூங்கா திட்டம் செயல்பட்டு வருகிறது. சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, சில இடங்களில் செயல்பட்டிலும் உள்ளது.
தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் – பிரேமலதா நம்பிக்கை…


