கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவி உட்பட நான்கு பேர் எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் குளிக்க சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தனா்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவி உட்பட நான்கு பேர் எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் குளிக்க வந்துள்ளனர். ஆழமில்லாத தரைப்பகுதியான எண்ணூர் கடற்கரைப் பகுதியில் கரையில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்பொழுது, வேகமாக வந்த அலைகளால் ஒரு பெண் மூச்சுத் திணறி சிக்கியுள்ளார். கரையிலிருந்த மூன்று பெண்களும் அலையில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற ஒவ்வொருவராய் முயற்சி செய்துள்ளனா். பின்னா் அவர்களும் அலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மதிய வேளையில் கடற்கரையில் மீனவர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. இதனால் பெண்களை காப்பாற்ற முடியவில்லை. அவா்களது உடல் சடலமாக கரை ஒதுங்கியது. இதனையடுத்து கடற்கரைக்கு வந்த மீனவர்கள் சடலமாக இருந்த பெண்களின் உடலைப் பார்த்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசாா் விரைந்து வந்தனா். மேலும், விசாரணையில், இறந்த 4 பெண்கள் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பவானி(19), தேவகி செல்வம், கல்லூரி மாணவி சாலினி(18), காயத்ரி, என தெரிய வந்துள்ளது. மூன்று பெண்கள் கும்மிடிப்பூண்டி ஜி என் டி சாலையில் உள்ள நீயூ மணி டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்வதாக தெரியவந்துள்ளது.
மோடியின் பேச்சு ‘ஆகாயப் புளுகு’….தேர்தல் ஆதாயத்திற்காக பிளவுபடுத்தும் அரசியல்… திருமாவளவன் கண்டனம்



