மதுரவாயல் தொகுதி அயப்பாக்கம் பகுதியில், ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் கருப்பு கொடி ஏற்ற வந்த திமுகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அயப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர் துரை வீரமணி தலைமையில் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தி, ஒன்றிய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனிடையே, அயப்பாக்கம்–திருவேற்காடு சாலையில் கருப்பு கொடி ஏற்ற முயன்ற திமுகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், காவல்துறையினரின் தடுக்குதலை மீறி திமுகவினர் சாலையில் கருப்பு கொடி ஏற்றி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கருப்பு கொடி ஏந்தியபடி ஊர்வலமாகவும் சென்றனர்.
முதல்வரின் அறைகூவலின் எதிரொலி… வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்
