ஜனவரி 10ஆம் தேதிக்குள் தொழில் வரியை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கா. ராஜலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாநகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் மொத்தம் 550க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருகளில் வீடு, கடைகள், வணிக வளாகங்கள் என 13 ஆயிரத்து 500 கட்டடங்கள் உள்ளன.

இதில் 298 அரசு அலுவலகங்களும், 3100 கடைகளும் உள்ளன. வீடுகளின் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு 1 கோடியே 42 லட்சம் ரூபாய் தொழில் வரியாக வசூல் ஆகும்.

இந்த நிலையில் தொழில் வரி செலுத்தாமல் பல வர்த்தக உரிமையாளர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதனையடுத்து நகராட்சி ஊழியர்கள் தற்போது ஒவ்வொரு கடைகளுக்கும் நேரில் சென்று தொழில் வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் நோட்டீஸ் வழங்கி எச்சரித்து வருகின்றனர்.

தற்போது, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் உரிமையாளர்கள் தொழில் வரி செலுத்தாமல் உள்ளனர். அரசு அலுவலகங்களைகங்களில் இருந்து 98 சதவிகிதம் தொழில் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகராட்சிக்கு தொழில் வரி வாயிலாக ரூபாய் 1.42 கோடி வருவாய் கிடைக்கும். ஆனால் இதுவரை ஒரு கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

கடைகளின் உரிமையாளர்கள் ரூபாய் 30 லட்சம் வரை வரி செலுத்த வேண்டி உள்ளது. நகராட்சி ஊழியர்கள் கடை உரிமையாளர்கள் நேரில் சந்தித்து தொழில் வரியை உடனே செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதிக்குள் தொழில் வரியை செலுத்த வேண்டும். தவறினால் கடைகளுக்கு சீல் வைக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் கா. ராஜலட்சுமி எச்சரிக்கை எடுத்துள்ளார்.


