உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 340 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளாா். ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, ”உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை தொடங்கப்படுகிறது. நாளைமுதல் அக்டோபர் மாதம் வரை முகாம் நடத்தப்படும். ஈரோடு மாவட்டத்தில் 4 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசு திட்டங்கள் வீடு தேடி வரும் வகையில் தொடங்கப்படும் இந்த திட்டத்திற்காக ஈரோடு மாவட்டத்தில் 340 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
60 வீட்டிற்கு ஓரு தன்னார்வலர் என 1117 தன்னார்வலர்கள் மாவட்டம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 6 இடங்களில் நாளை தொடக்கம். உடனடியாக தீர்வு காணப்படும் மனு மீது அன்றே தீர்வு காணப்படும்.மற்ற மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்.

மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களுக்கு தனியாக கவுண்டர்கள் அமைக்கப்படும். நலமுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம் நடத்தப்படும். ஜுலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறும் இந்த முகாமானது மாநகர பகுதியில் 40 முகாம்களும் நகராட்சி 42 பேரூராட்சி 82 ஊராட்சிகளில் 176 முகாம்களும் நடத்தப்படும்” என தெரிவத்தாா்.