- Advertisement -
திண்டிவனம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் என்பவர் விவசாயி அசோக் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்வதற்கு ரூபாய் 5000 லஞ்சம் வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை கையும் களவுமாக கைது செய்தனர்.


