கத்தி படம் தொடங்கி, தமிழக வெற்றிக்கழக மாநாடு அன்று காலை வாழ்த்து அறிக்கை விட்டது வரை விஜய்க்கு முழு ஆதரவாக நின்றவர் சீமான்.
ஆனால் இப்போது, நடிகர் விஜய்யின் தவெக அரசியல் கட்சியின் கொள்கை குறித்து விமர்சித்ததோடு, அழுகிய கூமுட்டை எனவும் தாக்கி பேசி பேசியது சமூகவலைதளங்களில் கடும் மோதலை உருவாக்கியுள்ளது.
‘‘எனது லட்சியத்துக்கு எதிராக தம்பி வந்தாலும், அண்ணன் வந்தாலும் எதிரி எதிரிதான்’’-
தமிழக வெற்றிக்கழகத்தோடு கூட்டணி வைக்க விரும்பிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த எண்ணத்தையே அடியோடு குழிதோண்டி புதைப்பது போல விஜய் மாநாட்டில் பேசிய மேனரிசத்தோடு பேசிய பேச்சுதான் இது. சென்னை பெரம்பூரில் நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சீமான், சரமாரியாக விமர்சித்து பேசினார். அரசியல் கட்சியின் கொள்கை குறித்து விமர்சித்ததோடு, அழுகிய கூமுட்டை எனவும் தாக்கி பேசினார்.https://twitter.com/SuseeMaha16/status/1852587506870706626
அடிப்படையே தவறு என கூறிய சீமான் வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ. என பேசியதால் கூட்டத்தினர் உற்சாகம் அடைந்தனர். நாம் தமிழர் கட்சியின் லட்சியத்திற்கு எதிராக யார் வந்தாலும் எதிர்ப்போம் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சூளுரைத்துள்ளார். சென்னை பெரம்பூரில் நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் அல்ல என்றதும் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
விடுதலை பெற்றவன் பேசுவதற்கும், உரிமைக்காக பேசுபவர்களுக்கும் வேறுபாடு உண்டு என்று சீமான் கூறினார். தங்களது முன்னோர்கள் உண்மையை உரத்துப் பேசவே தங்களுக்கு சொல்லிக்கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தவெக மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய், மன்னர் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் குறித்து குறிப்பிட்ட நிலையில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அம்பேத்கர், பெரியாரை போன்றோரை பற்றி தெரிந்துகொண்டதில் ஆராய்ச்சி பட்டம் பெறும் அளவுக்கு தனக்கு அனுபவம் உள்ளது என்றும், ஆனால், நீங்கள் இனிதான் அவர்களை பற்றியே படிக்க வேண்டுமென சீமான் கூறினார். வேலு நாச்சியார் கட்அவுட் வைத்துவிட்டால் போதுமா? என அனல் கக்கிய சீமான், அன்பு என்றால் அன்பு.. வம்பு என்றால் வம்பு என கொந்தளித்தார்.
https://twitter.com/JDKaranGOAT/status/1852570090266644870
இதனிடைடே எக்ஸ் தளத்தில் #கூமுட்டை_விஜய் என்கிற ஹேஸ்டேக்கை சீமான் ஆதரவாளர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். பதிலுக்கு, ‘‘விஜய்க்கு ஆதரவு அளிப்பதனால் வரும் விளம்பரத்தை விட எதிர்ப்பதனால் அதிகளவு விளம்பரம் வரும் என்பதை அறிந்தார் அதன் வெளிப்பாடே இப்பேச்சு’’ எனக்கூறி விஜய் ஆதரவாளர்கள் #புளுகுமூட்டை_சீமான் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே திமுகவை சேர்ந்தவர்கள், ‘‘அன்பு உடன்பிறப்புகளே! இனிமே நாம பாசிசத்தை அடிக்குற வேலையை மட்டும் பார்ப்போம். விசிலடிச்சான் குஞ்சுகளை இனிமே டம்ளர் பாய்ஸ் பார்த்துப்பாங்க.. நாம வேடிக்கை மட்டும் பார்ப்போம்’’ என வேடிக்கை பார்த்து வருகின்றனர்.