spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வங்கி கணக்கை வைத்து கடன் பெறுவது எப்படி ?அதை நீங்களே அறிந்து கொள்ளலாம்…!

வங்கி கணக்கை வைத்து கடன் பெறுவது எப்படி ?அதை நீங்களே அறிந்து கொள்ளலாம்…!

-

- Advertisement -

ஒருவரின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் கடன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அதனை கூகுள் பே மூலமாக பயனர்கள் எளிதில் கட்டணம் ஏதுமின்றி அறிந்து கொள்ளலாம். அது குறித்து தற்போது பார்ப்போம்.

வங்கி கணக்கை வைத்து கடன் பெறுவது எப்படி ?அதை நீங்களே அறிந்து கொள்ளலாம்…!வீட்டுக் கடன், வாகனக் கடன் அல்லது இன்னும் பிற கடன் தேவைப்படும் நபருக்கு சிபில் ஸ்கோர் மிகவும் அவசியம். இந்த நிலையில் வெறும் சிபில் ஸ்கோர் மட்டுமல்லாது ஒருவர் கடன் தொகையை தாமதமாக செலுத்தி இருந்தால் கூட அந்த விவரத்தையும் சேர்த்து வழங்குகிறது கூகுள் பே. இந்த அம்சம் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் 5 கோடி இந்தியர்கள் இதனை பயன்படுத்தி உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

we-r-hiring

கூகுள் பே-வில் சிபில் ஸ்கோர் செக் செய்வது எப்படி? – சிபில் ஸ்கோர் என்பது மூன்று இலக்க எண் ஆகும். இதன் அடிப்படையில் தான் கடன் வழங்குநர்கள் ஒருவருக்கு கடன் வழங்குவதற்கான தகுதியை மதிப்பிடுகிறது. அந்த வகையில் 750-க்கும் கூடுதலாக ஒருவரது சிபில் ஸ்கோர் இருந்தால் அது சிறந்ததாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் கடன் தவணை கால தாமதமாக செலுத்தியது போன்ற விவரங்களையும் இதில் அறிய முடியும்.

முதலில் உங்கள் மொபைல் போனில் கூகுள் பே செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து முகப்பு பக்கத்தில் உள்ள கீழ் பகுதியில் ‘மேனேஜ் யுவர் மனி’ பிரிவில் ‘Check your CIBIL score for free’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் பயனர்கள் ஆவணங்களில் உள்ளது படி தங்களது பெயரை முதலில் உள்ளிட வேண்டும். அதை செய்த பிறகு நொடி பொழுதில் பயனர்கள் தங்களது சிபில் ஸ்கோரை அறிந்து கொள்ள முடியும். ஏற்கனவே மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பான் கார்டு எண் போன்ற விவரங்களை ஏற்கெனவே வங்கி மற்றும் பயனர்கள் மூலம் கூகுள் பே அறிந்துள்ள காரணத்தால் சிபில் ஸ்கோரை எளிதில் பெற முடிகிறது. இது TransUnion CIBIL நிறுவனத்தின் துணையுடன் கூகுள் பே நிறுவனம் வழங்குகிறது.

MUST READ