- Advertisement -
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சபாராஜ். இவரது மகள் ஹன்யா(5). இவா்கள் ஒசூா், பேடரப்பள்ளி, கங்கா நகரில் தங்கி இருந்தனா். சபாராஜ் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், குழந்தை ஹன்யா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, தவறி கீழே விழுந்தாா். அதில், குழந்தைக்கு தலையில் அடிபட்டது. அவரை உறவினா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஹன்யா இறந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.