spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇளைஞர் குடலில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி - வயிற்றுக்குள் எப்படி சென்றது?

இளைஞர் குடலில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி – வயிற்றுக்குள் எப்படி சென்றது?

-

- Advertisement -

இளைஞர் குடலில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி - வயிற்றுக்குள் எப்படி சென்றது?

புது தில்லி வசந்த் குஞ்சில்  தனியார் மருத்துவமனையில் 23 வயது இளைஞரின் சிறுகுடலில் இருந்து 3 செ.மீ அளவுள்ள கரப்பான் பூச்சியை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

வசந்த் குஞ்சில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் மேம்பட்ட எண்டோஸ்கோபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 10 நிமிடங்களில் அகற்றப்பட்டதாக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகளை எதிர்கொண்ட இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை  அன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, இளைஞரின் மேல் இரைப்பை குடலில் மருத்துவக் குழு பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனையின் போது இளைஞரின் சிறு குடலில் உயிருடன் கரப்பான் பூச்சி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இரண்டு தடங்களை கொண்ட சிறப்பு எண்டோஸ்கோப்பி (Special endoscopy with two tracks) தொழிநுட்பத்தை பயன்படுத்தி இளைஞரின் வயிற்றில் இருந்த கரப்பான் பூச்சியை அகற்றியதாக மருத்துவர் வாத்ஸ்யா என்பவர் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு எண்டோஸ்கோப்பி இரு தடங்களை கொண்டது எனவும் அதில் ஒன்று காற்று மற்றும் நீர் உட்செலுத்துவதற்கும் மற்றொன்று உறிஞ்சுவதற்கும் பயன்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

அசாம் சிறையில் இருந்து பெட்ஷீட் லுங்கியை கொண்டு 5 கைதிகள் தப்பியோட்டம் – சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

நோயாளி சாப்பிடும் போது கரப்பான் பூச்சியை விழுங்கியிருக்கலாம் அல்லது தூங்கும் போது வாயின் வழியாக நுழைந்திருக்கலாம் என் கூறியுள்ளனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் விரைவாக சிகிச்சை அளிக்காவிட்டால் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

MUST READ