spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ இலவச விண்வெளி பயிற்சியின் முழு விபரம் இதோ!

மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ இலவச விண்வெளி பயிற்சியின் முழு விபரம் இதோ!

-

- Advertisement -

இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ – ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இந்த இரண்டு வார இலவச உறைவிடப் பயிற்சி முகாம், எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் ஒரு அருமையான வாய்ப்பாகும். இத்திட்டத்திற்கு பிப்.27 முதல் விண்ணப்பிக்கலாம். தகுதிகள் என்ன என்பது குறித்தான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ இலவச விண்வெளி பயிற்சியின் முழு விபரம் இதோ!

விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவை கொண்டிருக்கும் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. Indian Space Research Organisation (இஸ்ரோ) நிறுவனம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக ‘யுவிகா 2026’ (YUVIKA – Young Scientist Programme) எனும் இரண்டு வார இலவச உறைவிடப் பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது.

we-r-hiring

இளம் வயதிலேயே அறிவியல் திறமைகளை கண்டறிந்து வளர்ப்பது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM)  சார்ந்த துறைகளில் மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 2019 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயிற்சியின் போது மாணவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நேரடியாக கலந்துரையாடுவதுடன், விண்வெளி ஆய்வகங்களை பார்வையிட்டு, செய்முறை அடிப்படையிலான பயிற்சிகளிலும் பங்கேற்க வாய்ப்பு பெறுவார்கள்.

விண்ணப்பிக்கும் காலம் மற்றும் தகுதி
2026ஆம் ஆண்டிற்கான யுவிகா பயிற்சிக்கு பிப்ரவரி 27 முதல் மார்ச் 31 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1, 2026 நிலவரப்படி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பயிற்சி நடைபெறும் இடங்கள்
மே 11 முதல் மே 22 வரை நடைபெறும் இந்த இரு வாரப் பயிற்சி, இஸ்ரோவின் முக்கிய மையங்களில் நடைபெறும். அவற்றில் பெங்களூரு, ஸ்ரீஹரிகோட்டா மற்றும் திருநெல்வேலி அருகே உள்ள மகேந்திரகிரி உள்ளிட்ட மையங்கள் அடங்கும்.

தேர்வு நடைமுறை
இந்தத் திட்டத்திற்கு தனி நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. மாணவர்கள் கீழ்க்கண்ட அளவுகோல்களின் அடிப்படையில் மெரிட் முறையில் தேர்வு செய்யப்படுவர்:

8ஆம் வகுப்பு மதிப்பெண்கள் – 50%, ஆன்லைன் வினாடி வினா – 10%, அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்பு – 10%, என்.சி.சி / என்.எஸ்.எஸ் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பெற்ற சான்றிதழ்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பபடுவார்கள்.

ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்தும் சமமான அளவில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும். மேலும், குக்கிராமத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு சென்ற அடைய வேண்டும் என்பதற்காக பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட கிராமப்புற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தேர்வில் 15% கூடுதல் வெயிட்டேஜ் வழங்கப்படும்.

முழுக்க முழுக்க இலவசம்
தேர்வு செய்யப்படும் மாணவர்களின் தங்குமிடம், உணவு, பயிற்சி பொருட்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் இஸ்ரோ ஏற்றுக்கொள்கிறது. அதோடு, மாணவர்கள் வருகை மற்றும் திரும்பும் பயணத்திற்கான இரண்டாம் வகுப்பு ஏசி (II AC) ரயில் அல்லது பேருந்து கட்டணமும் திருப்பி வழங்கப்படும்.

விண்வெளி துறையில் எதிர்காலத்தை காண விரும்பும் இளம் மாணவர்களுக்கு ‘யுவிகா 2026’ திட்டம் ஒரு அரிய வாய்ப்பாகும். ஆர்வமுள்ள மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.

தமிழகத்தில் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள்…

MUST READ