Homeசெய்திகள்இந்தியாஅதானி குழுமம் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

-

 

"ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்"- ராகுல் காந்தி பேச்சு!
Photo: ANI

அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையைத் தொடர்ந்து ‘OCCRP’ அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அதானி விவகாரங்கள் குறித்து மும்பையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 31) மாலை 05.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மேட்ரிமோனி மூலம் திருமண ஆசை காட்டி மோசடி-ஆவடி காவல் இணை ஆணையகரத்தில் இளம்பெண் புகார்

அப்போது ராகுல் காந்தி எம்.பி. கூறியதாவது, “அதானி நிறுவனம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்? அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். முறைகேடு புகார் தொடர்பாக, நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு பிரதமர் வலியுறுத்தாதது ஏன்?

அதானி குழுமம் முதலீடு செய்தது யாருடைய பணம் என்பது தான் முதல் கேள்வி. நாட்டில் பொருளாதாரம் மற்றும் வணிகம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இந்தியாவின் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ளும் நிறுவனத்தில் முதலீடு செய்ய அனுமதித்தது ஏன்? பிரதமருக்கு நெருக்கமானவரின் நிறுவனத்திற்கு தரப்படும் சலுகைக் குறித்து ஜி20 தலைவர்கள் கேள்வி எழுப்புவர்.

இருசக்கர வாகன திருடன் கைது – 3 வாகனங்கள் பறிமுதல்

ஜி20 தலைவர்கள் வருவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

MUST READ