டெல்லியில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தீபாவளி பண்டிகைக்கு பின் காற்று மாசு அதிகரித்துள்ளது.
கடந்த 2020 முதல் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. மேலும் புது டெல்லியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு உச்சநீதிமன்றமும், டெல்லி அரசும் கோரி வந்திருந்தன.
இந்நிலையில், தீபாவளி அன்று இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி இரவு 2.30 வரை டெல்லியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இச்சூழலில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. குறிப்பாக வசீர்ப்பூர், பவானா, ஜஹாங்கீர் பகுதிகளில் நிலைமை மோசமானது. கடந்த ஆண்டு தீபாவளி அன்று டெல்லியில் காற்று தரக்குறியீடு 359 ஆக பதிவானது. ஆனால் இந்த ஆண்டு 450 கடந்தது. இது தேசிய சராசரியைவிட 1.8 மடங்கு அதிகமாகும்.
’டியூட்’ திரைப்படம் மீது வழக்கு – இளையராஜாவுக்கு ஐகோர்ட் அனுமதி..!



