Homeசெய்திகள்இந்தியாசெப்.17- ல் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!

செப்.17- ல் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!

-

- Advertisement -

 

வரும் செப்டம்பர் 17- ஆம் தேதி அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய கனிமங்கள், நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளது.

விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் – தலைவர் வெங்கடேசன்

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “செப்டம்பர் 18- ஆம் தேதி அன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், செப்டம்பர் 17- ஆம் தேதி அன்று மாலை 04.30 மணிக்கு அனைத்துக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான அழைப்பிதழ் சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டத்தில், வரும் செப்டம்பர் 18- ஆம் தேதி கூடவுள்ள நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.

விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்-சா.மு நாசர் பங்கேற்பு

செப்டம்பர் 18- ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 22- ஆம் தேதி வரை ஐந்து அமர்வுகளாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

MUST READ