நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “விவசாயிகளுக்கு நாங்கள் இலவசங்களை வழங்கவில்லை; ஆனால் அவர்களை சுயசார்பு உள்ளவர்களாக ஆக்கியுள்ளோம். விவசாயிகள் கடன் வாங்க அவசியமில்லாத நிலை பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.
‘ஃபிளையிங் கிஸ்’- சர்ச்சையில் ராகுல் காந்தி!
ஏழைகளின் வங்கிக் கணக்கில் பணத்தை நேரடியாக செலுத்துவதன் மூலம் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தைக் காக்க எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயலும் நிலையில், என்டிஏ கூட்டணிக் கொள்கையைக் காக்கப் போராடுகிறது. பொருளாதாரத்தில் 11ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
2027- ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும். காங்கிரஸ் திட்டங்களை அறிவிப்பதோடு நின்று விடுகிறது; பா.ஜ.க. அரசு தான் அதனை செயல்படுத்துகிறது. பயங்கரவாதம் இல்லாத காஷ்மீரை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இடையறாதுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. 90 இடங்களில் சோதனை நடத்தி பாப்புலர் ‘ஃபிரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பைத் தடைச் செய்துள்ளோம்.
மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது வெட்கக் கேடானது. மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவங்களை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மணிப்பூர் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. மணிப்பூர் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்தேன்.
“17 மணி நேரம் உழைக்கிறார் பிரதமர் மோடி”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
மியான்மர் நாட்டில் இருந்து பழங்குடியினர் அகதிகளாக மணிப்பூர், மிசோரம் மாநிலங்களுக்கு வந்தனர். தற்போது இரு மாநில எல்லைகளிலும் வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற அறிவுரை மற்றும் வதந்திகள் காரணமாக, மணிப்பூரில் கலவரம் தொடங்கியது” எனத் தெரிவித்துள்ளார்.