
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு அதிகபட்சத் தொகையாக, அம்மாநிலத்திற்கு சிறப்பு மானியமாக 10,460 கோடி ரூபாயை மத்திய அரசு விடுத்துள்ளது.

காவல்துறையில் காவி மயத்துக்கு இடமில்லை! துணை முதல்வர் எச்சரிக்கை
கடந்த 2014- ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது, அம்மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை 22,948 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு வரை ஆந்திராவிற்கு 4,117 கோடி ரூபாய் மட்டும் மத்திய அரசு, சிறப்பு நிதியாக ஒதுக்கியிருந்தது. இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சத் தொகையாக 10,460 கோடி ரூபாயை மத்திய அரசு ஆந்திரா மாநிலத்திற்கு விடுத்துள்ளது.
இது முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் விட முயற்சி, நம்பகத்தன்மைக்கு கிடைத்தப் பரிசு என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் சாலை விபத்து – 7 பேர் பலி
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி ஆளாத மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியைக் குறைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஆந்திர மாநில அரசுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


