கால்வாயில் கவிழ்ந்த பேருந்து- 7 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் போக்குவரத்துக் கழகத்தின் ஏ.சி. சொகுசு பேருந்து சாகர் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தர்ஷி – பொதிலி சாலையில் சென்று கொண்டுருந்த ஆந்திர மாநில அரசின் ஏ.சி. சொகுசு பேருந்து சாகர் கால்வாயில் கட்டுபாட்டை இழந்து கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் 45 பேர் இருந்த நிலையில், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் உள்ளூர் பொதுமக்களுடன் இணைந்து கிரேன் மூலம் பேருந்தில் இருந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில், 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.