வங்கதேசத்தில் போர் விமானம் ஒன்று பள்ளியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் தீ காயங்களோடு மாணவர்கள் மீட்கப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சீன தயாரிப்பு போர் விமானமான ஜே-7 வகை போர் விமானம் ஒன்று இன்று பிற்பகல் வங்கதேசத்தில் உள்ள பள்ளியின் மீது விழுந்து விபத்துகுள்ளானது. வங்கதேச விமானப்படையில் உள்ள ஜே-7 வகை போர் விமானம் வங்கதேச தலைநகரம் டாக்காவில் வழக்கமான பயிற்சியை மேற்கொண்டிருந்த போது டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி மீது விழுந்து விபத்துகுள்ளானது.
இன்று பிற்பகல் 1.6 மணிக்கு இந்த விபத்தான நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் தீ கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும் வங்கதேச இராணுவத்தினர் விபத்து நடந்த இடத்தில் உடனடியாக மீட்பு பணிகளை தொடங்கிய நிலையில் போதிய ஆம்புலன்ஸ்கள் கிடைக்காத சூழலில் ரிக்க்ஷா உள்ளிட்டவை மூலம் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
வங்கதேச அரசு அறிக்கையின்படி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் படுகாயங்களோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பலருக்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான தீ காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி போர் விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது? என்பது குறித்து விரிவான விசாரணைக்கு வங்கதேச விமானப்படை உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- Advertisement -