Homeசெய்திகள்இந்தியாஅரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து துணைநிலை ஆளுநருக்கு அறிக்கை!

அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து துணைநிலை ஆளுநருக்கு அறிக்கை!

-

 

அவசரச் சட்டத்தின் மூலம் டெல்லி அரசின் அதிகாரம் பறிப்பு!
File Photo

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே இன்சுலின் செலுத்துவதை நிறுத்திக் கொண்டதாக திஹார் சிறை நிர்வாகம், டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

தெலங்கானவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைப் பெற்று வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், இன்சுலின் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு வாய் வழியான மருந்துகள் மட்டும் உட்கொள்வதாக திஹார் சிறை நிர்வாகத்தின் மருத்துவ சோதனையின் போது, அவர் தெரிவித்ததாக திஹார் சிறை நிர்வாகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை ஆவணங்களின் படி, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவை இல்லை என அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலையை மருத்துவ நிபுணர் ஒருவர், ஏப்ரல் 10, 15 ஆம் தேதிகளில் பரிசோதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மறுக்கப்பட்டதாகக் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளையே உட்கொள்வதாகவும் திஹார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறையில் தேவையான இன்சுலின் கையிருப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநருக்கு சிறை நிர்வாகம் அனுப்பியுள்ள அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி, அந்த அறிக்கை பா.ஜ.க.வின் சதியை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோலாகலமாக நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

பா.ஜ.க.வின் தூண்டுதலின் படி அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலே கொல்ல சதித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுப்பதில் என்ன சிக்கல் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ