
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்டவிரோதம் அல்ல எனக் கூறிய டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் தர மறுப்புத் தெரிவித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு ஆட்டுச்சந்தைகள்!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21- ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில், தனது கைதை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 09) பிற்பகல் 04.00 மணிக்கு விசாரணைக்கு வந்த போது, “அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்டவிரோதம் அல்ல; தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு இடையேயான பிரச்சனை கிடையாது; அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவால் இடையேயான சட்ட விவகாரம். நீதிமன்றங்கள் அரசியலுக்குள் செல்ல முடியாது; அரசியல் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் முன் செல்லாது.
நீதிபதிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்; அவர்கள் அரசியல் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவர்கள். மற்றவர்களுடன் இணைந்து முறைகேட்டில் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஈடுபட்டிருக்கிறார் என்பதை காண முடிகிறது. தேர்தல் நேரம் என்பதால் விசாரணைக்கு வர முடியாது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதை ஏற்க முடியாது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதே தவிர, தேர்தலின் போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் – அன்புமணி!
பொது வாழ்வில் உள்ளவர்கள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். மதுபானக் கொள்கை முறைகேட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்பு சலுகையும் காட்ட முடியாது” என்று கூறி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
எனினும், சிறையில் இருந்தவாறே டெல்லி அரசின் கோப்புகளுக்கு கையெழுத்திட்டும், உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.