spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகேரளாவில் படகு கவிழ்ந்த விபத்து- 23 பேர் பலி

கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்து- 23 பேர் பலி

-

- Advertisement -

கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்து- 23 பேர் பலி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தானூர் என்ற இடத்தில் காயலில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து 23 பேர் உயிரிழந்தனர்.

மலப்புரம் மாவட்டம் தாணுர் என்ற இடத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் சுற்றுலா படகில் 35 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு படகு காயலில் பயணித்துள்ளது. சிறிது தூரம் சென்றவுடன் திடீரென தலைக்குப்புற படகு கவிழ்ந்துள்ளது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணி மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் இருந்தது. உடனடியாக தகவல் தெரிந்தும் பொதுமக்களும் தீயணைப்பு துறையினரும், படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

we-r-hiring

35-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பலரும் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான படகு ஜேசிபி உதவியுடன் காயிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டுள்ளது. அதிகமான சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது தான் விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எதனால் விபத்து நேர்ந்தது என விசாரணை நடைபெற்றுவருகிறது.

MUST READ