ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து ஆப்பிரிக்கா நாட்டிற்கு 640 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற கப்பல் தடுத்து நிறுத்தம். துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் ஆய்வு மேற்கொண்டு கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய ரேஷன் அரிசி பதுக்கி வைத்து பல நாடுகளுக்கு கப்பலில் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த துவரம்புடி சந்திரசேகர் ரெட்டி இந்த கடத்தலுக்கு முக்கிய நபராக இருந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. காக்கிநாடாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பவன் கல்யாண் துவாரம்புடி கடத்தல் சாம்ராஜ்யத்தை அம்பலப்படுத்தி சிறைக்கு அனுப்புவேன் என்று சவால் விடுத்தார்.
இந்நிலையில் உணவு வழங்கல் துறை அமைச்சராக ஜனசேனா கட்சியை சேர்ந்த நாதல்ல மனோகர் இருந்து வருகிறார். அவர் பதவியேற்றதில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கப்பல் ஏற்கனவே கடலுக்கு சென்றுவிட்டது என்று தகவல் அறிந்த கலெக்டர் ஷன்மோகன் தலைமையில் அதிகாரிகள் கடலில் 9 கடல் மைல் தொலைவில் போக்குவரத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்த ஸ்டெல்லா எல் பனாமா கப்பலில் 640 டன் ரேஷன் கடத்துவதை அறிந்து அதனை தடுத்து நிறுத்தினார்.
இதனையடுத்து துணை முதல்வர் பவன் கல்யாண் அமைச்சர் நாதல்ல மனோகர் மற்றும் அதிகாரிகளுடன் காக்கிநாடா துறைமுகம் சென்று அங்கிருந்து சிறப்பு படகில் ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருந்த கப்பலை ஆய்வு செய்தார். இதில் தெலுங்கு தேசம் கட்சியின் அந்த தொகுதி எம்.எல்.ஏ வானமாடி வெங்கடேஸ்வர ராவ் சென்றார். அப்போது கடத்தல்காரர்களுடன் சமரசம் செய்து கொண்டீர்களா என ரேஷன் அரிசி எப்படி துறைமுகத்துக்கு வரும் என எம்.எல்.ஏ. விடம் கேள்வி எழுப்பி இதற்காகவா போராடினோம் என்று கேட்டார்.
மேலும் துறைமுக அதிகாரிகள் மீதும் கோபமடைந்த பவன் கல்யாண் ரேஷன் அரிசியை கடத்தலுக்கு ஏற்றுமதி செய்வதற்காக துறைமுகத்தில் இருந்து அனுமதி அளித்த அதிகாரிகளின் பெயர்களை பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டார். காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து இவ்வளவு அரிசி கடத்தப்படும் போது அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் மக்கள் பிரதிநிதிகள் வந்து, அரிசி கடத்தலை தடுக்க முடியாது. அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் இது குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதவும் உத்தரவிட்டார்.
பல்லடம் சம்பவம் : பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி! -அண்ணாமலை