spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"ரயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது"- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!

“ரயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது”- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!

-

- Advertisement -

 

"ரயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது"- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!
Photo: ANI

ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே ஹவுரா, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட கோர விபத்தில் 288 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 200 பேரில் உடல்களை அடையாளம் காண முடியவில்லை என்று ஒடிஷா மாநில அரசு தெரிவித்துள்ளது.

we-r-hiring

ரயில் விபத்தில் சிக்கியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை!

விபத்தில் காயமடைந்த 700 பேர் ஒடிஷா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் மாநில அரசுகள் சார்பிலும், மத்திய ரயில்வேத்துறை அமைச்சகத்தின் சார்பிலும், பிரதமர் சார்பிலும் தனித்தனியே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் மேற்பார்வையில் இரண்டாவது நாளாக விபத்து நடந்த பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சீரமைப்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் என 1,000 பேர் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்தது தமிழக குழு!

செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஒடிஷாவில் ரயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. பாலசோரில் விபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் புதன்கிழமை முதல் போக்குவரத்து தொடங்கும். ரயில் பாதையைச் சீரமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ