
பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 50- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
டெல்லி ஆனந்த் விகாரில் இருந்து காம்யாக்கியா நோக்கிச் சென்ற வடகிழக்கு அதிவிரைவு ரயில், பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே இரவு 09.35 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 21 பெட்டிகள் கொண்ட ரயிலின் ஏசி பெட்டிகள் உள்பட ஆறு பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து, ரயில்வே போலீசாரும், உள்ளூர் மக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
அடுத்த சில மணி நேரங்களில் ரயில்வே அதிகாரிகளும், மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். 50- க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
‘என்கவுன்ட்டரில் இரண்டு ரவுடிகள் கொலை’!
ரயில் இயல்பான வேகத்திலேயே வந்துக் கொண்டிருந்ததாகவும், திடீரென சத்தம் கேட்டதைப் பார்த்து, விரைந்துச் சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கியதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


