Homeசெய்திகள்இந்தியாஎதிர்க்கட்சிகளின் அமளி..... விவாதமின்றி நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!

எதிர்க்கட்சிகளின் அமளி….. விவாதமின்றி நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!

-

 

எதிர்க்கட்சிகளின் அமளி..... விவாதமின்றி நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!
File Photo

மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தை உலுக்கி வரும், அதே வேளையில் நிலுவையில் மசோதாக்களை விவாதமின்றி மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா மக்களவையில் ஏற்கனவே விவாதமின்றி நிறைவேறியது. ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவுச் சங்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்யவும், அவற்றை நிதிச் சிக்கலில் இருந்து மீட்க புதிய நிதி உருவாக்கவும் சட்டத் திருத்தம் வகைச் செய்கிறது.

கூட்டுறவுச் சங்கங்கள் தங்கள் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் மத்திய அரசின் அனுமதி தேவைப்படும். கூட்டுறவுச் சங்கங்கள் பல்வேறு மாநிலங்களில் அரசியலுடன் நெருக்கமாகத் தொடர்புக் கொண்டுள்ளன என்பதால், இந்த சட்டத்திருத்த மசோதா முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதேபோல், வனங்கள் பாதுகாப்பு மசோதாவும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு- காஷ்மீர் பழங்குடியினர் பட்டியலில் திருத்தம் செய்யும் மசோதா போன்ற பல்வேறு மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் விவாதத்தில் பங்கேற்காமலே, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

2025 இல் இந்தியன் 3 ரிலீஸ் கன்ஃபார்ம்….. படக்குழுவினரின் புதிய திட்டம்!

டெல்லி அரசு அதிகாரிகள் நியமன அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் அவசரச் சட்டத்தை நிரந்தரமாகக் கொண்டு வரப்படும் மசோதா விரைவில் விவாதத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, மாநிலங்களவையில் இருந்த மசோதா அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து தோற்கடிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்தியா கூட்டணியில் இடம் பெறாத பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியும், இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களை வலியுறுத்தியுள்ளது.

MUST READ