
குடியுரிமைத் திருத்தச் சட்டமான சிஏஏ கட்டாயம் அமல்படுத்தப்படும் என்றும், சிஏஏ-வை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

2024 தீபாவளி வெடியாக வௌியாகும் தளபதி 68 திரைப்படம்
மேற்கு வங்கம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்பதாகக் கூறிய அவர், இதனை அமல்படுத்துவதைத் தடுக்க முடியாது என்றார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பயன்பெறுவர் என்றும், அனைவருக்கும் அந்த சட்டம் அதிகாரத்தை அளிக்கும். 2024- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் பெற உள்ள வெற்றியின் மூலம் 2026- ஆம் ஆண்டு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும்.
ஊழல், அரசியல் வன்முறை, சட்டவிரோத ஊடுருவல் ஆகியவற்றின் மூலம் மேற்கு வங்கத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு சீரழித்து வருகிறது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ராஷ்மிகாவை குறிவைக்கும் ரிஷப் ஷெட்டி? கன்னட திரையுலகை விட்டுக்கொடுக்காத ரிஷப்…
கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் பா.ஜ.க. வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.