
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று (மே 12) காலை 10.30 மணிக்கு வெளியானது.

இரண்டு குழந்தைகளை மூதாட்டியிடம் விட்டுவிட்டு டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற தாய்
நாடு முழுவதும் பிப்ரவரி 15- ஆம் தேதி முதல் ஏப்ரல் 5- ஆம் தேதி வரை நடந்த சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வை 16.9 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இந்த நிலையில், நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியானது.
தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ள மாணவர், மேலே குறிப்பிட்டுள்ள இணையதளப் பக்கத்திற்கு சென்று பதிவெண் மற்றும் பள்ளியின் பெயர், அட்மிட் கார்டு எண் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு டன் எடைக் கொண்டத் தேரை தோள்களில் சுமந்த பக்தர்கள்!
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 87.33% மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், யார் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் என்பதை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


