spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஎன்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- சந்திரபாபு நாயுடு

என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- சந்திரபாபு நாயுடு

-

- Advertisement -

என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- சந்திரபாபு நாயுடு

என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று காலை கைது செய்யப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் நந்தியாலா போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தனது தந்தையை பார்க்க வேண்டும் என புறப்பட்ட மகன் லோகேஷை போலீசார் தடுத்து நிறுத்தினர், இதனால் போலீசாருடன் லோகேஷ் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்

Image

we-r-hiring

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆந்திரா மாநிலம் முழுவதும் தெலுங்கு தேச கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்தில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகளும் மாநில எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட தனது தந்தையை பார்க்க வேண்டும் என புறப்பட்ட மகன் லோகேஷை போலீசார் தடுத்து நிறுத்தினர், இதனால் போலீசாருடன் லோகேஷ் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்.

Image

இந்நிலையில் தனது கைது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. வழக்கை திசை திருப்புகிறார்கள், நான் எந்த ஊழலையும் செய்யவில்லை, சட்டபடி வழக்கு விசாரணையை சந்திப்பேன். புகாரில் உண்மையில்லை என்பதால் கட்சியினர் யாரும் பதற்றப்பட வேண்டாம்” என்றார்.

MUST READ