spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள் எவை?

தமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள் எவை?

-

- Advertisement -

 

"நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்தவர் அசாம் முதலமைச்சர்"- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

we-r-hiring

வரும் ஏப்ரல் 12- ஆம் தேதி அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த புதிய சோதனை!

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 10 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்கும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பரப்புரைத் திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தயாரித்து, டெல்லியில் உள்ள தலைமைக்கு ஒப்புதலுக்காக அனுப்பியது.

தினந்தோறும் உச்சம் தொடும் தங்கம் விலை!

இதையடுத்து, வரும் ஏப்ரல் 12- ஆம் தேதி மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வரவுள்ளார். குறிப்பாக, நெல்லை, கோவையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ள அவர், கோவையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

MUST READ