Homeசெய்திகள்இந்தியா"தேர்தல் திருவிழாவுக்கு தயாராகுங்கள்"- தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அழைப்பு!

“தேர்தல் திருவிழாவுக்கு தயாராகுங்கள்”- தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அழைப்பு!

-

 

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்தாண்டில் இதுதான் மிகவும் முக்கியமான செய்தியாளர் சந்திப்பு. தேர்தலை திருவிழா போன்று நடத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

மலச்சிக்கல் முதல் புற்றுநோய் வரை….. தீர்வாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு!

தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பங்கெடுத்து கொள்ளுங்கள். ஒவ்வொரு தேர்தலும் சவால் நிறைந்தது தான். மக்களவைத் தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.

உடல் சூட்டை தணிக்கும் ஆமணக்கு எண்ணெய்….. எப்படி பயன்படுத்துவது?

மிக உயர்ந்த தரத்தில் தேர்தலை நடத்த நான் உறுதியளிக்கிறேன். வன்முறையின்றி, அமைதியாக தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1.82 கோடி பேர் முதன்முறை வாக்காளர்கள், 82 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். வெளிப்படையான, நியாயமான தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உறுதி பூண்டுள்ளது” என்றார்.

MUST READ