Homeசெய்திகள்இந்தியா'தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் யாரிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றன?'- விரிவான தகவல்!

‘தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் யாரிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றன?’- விரிவான தகவல்!

-

 

'தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் யாரிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றன?'- விரிவான தகவல்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் யாரிடமிருந்து எவ்வளவு நிதி பெற்றன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.

விஷ்வகுருவான பிரதமர் மவுனகுருவானது ஏன்? – முதலமைச்சர் கேள்வி

அதன்படி, பா.ஜ.க. பெற்ற ரூபாய் 6,986 கோடியில் 2019- 20- ல் மட்டும் ரூபாய் 2,555 கோடி தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க. பெற்ற ரூபாய் 656 கோடியில் லாட்டரி மார்டின் நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 509 கோடி கிடைத்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூபாய் 442 கோடி, பிஜு ஜனதா தளம் ரூபாய் 944 கோடி, தெலுங்கு தேசம் ரூபாய் 181 கோடி, காங்கிரஸ் கட்சி ரூபாய் 1,334 கோடி நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றன.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அ.தி.மு.க. பெற்ற ரூபாய் 6 கோடியில் ரூபாய் 4 கோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அளித்துள்ளது. கோவையைச் சேர்ந்த எல்எம்டபிள்யூ நிறுவனம், அ.தி.மு.க.விற்கு ரூபாய் 1 கோடி நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் அளித்துள்ளது.

தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும் – அன்புமணி!

இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறவில்லை என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தே.மு.தி.க. கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளது.

MUST READ