spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"எமர்ஜென்சி, வங்கதேச சுதந்திரம்" குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி!

“எமர்ஜென்சி, வங்கதேச சுதந்திரம்” குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி!

-

- Advertisement -

 

"எமர்ஜென்சி, வங்கதேச சுதந்திரம்" குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி!
Photo: Sansad TV

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மக்களவை பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனா காலத்திலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டோம். அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும். இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் லால் பகதூர் சாஸ்திரி. நாட்டின் பொருளாதார சுமையைக் குறைக்க நரசிம்மராவ் தலைமையிலான அரசு பாடுபட்டது.

we-r-hiring

டிடிஎஃப் வாசனை ஐயோ பாவம் என்று நினைத்துவிடாமல் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்க- பாஜக

நாட்டின் பன்முகத்தன்மையை பறைச்சாற்றும் நாடாளுமன்றம். பலத் தடைகளைக் கடந்து நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். புதிய உற்சாகத்துடன் புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு நாம் இடம் பெயரவுள்ளோம். நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள் இந்த நாடாளுமன்றத்திற்கு பெருமைச் சேர்த்துள்ளனர். இந்த நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கடந்த 75 ஆண்டுகளாக நாடாளுமன்றம் மீது அசைக்க முடியாத அளவிற்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். நாடாளுமன்றத்தைக் காக்க குண்டடிப்பட்டவர்களை இந்த நாளில் நினைவுக் கூறுகிறேன். நாடாளுமன்றத்தைக் காக்க உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் நான் தலை வணங்குகிறேன்.

மகளிர் உரிமை திட்டத்தில் ரூ.1,000 வரவில்லை?- நாளை முதல் உதவி மையம்

நேரு முதல் மன்மோகன் சிங் வரை பிரதமராக இருந்த அனைவரும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர். வங்கதேசத்திற்கு சுதந்திரம் பெற எடுக்கப்பட்ட வரலாற்று முடிவு, இதே நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டது. இதே அவையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு ஜனநாயகம் மீதான தாக்குதல் நடந்தது” என்றார்.

MUST READ