ஜார்க்கண்ட்டில் இன்று அதிகாலை ஹவுரா – மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் பலி மேலும் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே ஹவுரா – மும்பை விரைவு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து அதிகாலை 3:45 மணியளவில் நடந்ததாக CPRO தென்கிழக்கு ரயில்வே உறுதிப்படுத்தியது. தகவல் அறிந்த ரயில்வே மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
ரயில் தடம் புரண்ட விபத்தில் 80% பயணிகள் அருகில் உள்ள சக்கரதர்பூர் ரயில் நிலையத்திற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளோரை மீட்க ரயில் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ஹவுரா – மும்பை விரைவு ரயில் தடம் புரண்டதால் தொடர்ந்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.