- Advertisement -
சுல்தான்புரி சாலை அருகே கடுமையான தீ விபத்து
டெல்லியில் சுல்தான்புரி சாலை அருகே உள்ள குடிசைப் பகுதியில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது.
தீயை கண்டதும் மக்கள் அலறியடித்து ஓட்டம்
அதிக குடிசை வீடுகள் உள்ள சுல்தான்புரி சாலை அருகே இன்று அதிகாலை கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அலறியடுத்துக் கொண்டு வெளியேறினர். உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து 15 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை
தீ விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று மண்டல தீயணைப்புதுறை அதிகாரி, ஏகே ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இருப்பினும், 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவனையில் சேர்த்தனர். மேலும், தீயை அணைக்கும் பணியில் போரோக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.