ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பெண்கள் பலி
ஆந்திராவில் கூலி தொழிலாளர்கள் சென்ற ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பெண் கூலி தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

![]()
![]()
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தாமரசர்லா மண்டலம் நரசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 23 பேர் ஒரு ஷேர் ஆட்டோவில் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் குரஜாலா மண்டலம் புலிபாடுக்கு கூலி பணிக்காக இன்று காலை புறப்பட்டனர். இந்த ஆட்டோ பல்நாடு மாவட்டம் தாகேபள்ளி அருகே சென்று கொண்டுருந்தபோது அதிவேகமாக வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த புக்யா பத்மா (25), வர்த்யா சக்ரி (32), இஸ்லாவத் மஞ்சுளா (25), பூக்யா சோனி (65), மாலோத் கவிதா (33) ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை அப்பகுதியினர் ஆம்புலன்ஸ் மூலம் குர்ஜாலா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். லாரி மோதியதில் ஆட்டோவின் முன்பகுதி முற்றிலும் நசுங்கியது. ஆட்டோவின் முன்பகுதியில் அமர்ந்திருந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.


