
தனியார் துறையினர் தங்கம், வெள்ளி, லித்தியம் போன்ற மதிப்பு வாய்ந்த கனிமங்களை வெட்டி எடுக்க வழி வகைச் செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா ஏற்கனவே மக்களவையிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமாக நிறைவேற்றப்படவுள்ளது.

“மன்னிப்புக் கோர முடியாது”- உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
உலகின் சூழல் மாற்றத்திற்கு ஏற்ப இதுபோன்ற அனுமதி தேவைப்படுவதாக மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசிய மத்திய நிலக்கரி, கனிமவளங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மதிப்பு வாய்ந்த கனிமங்கள் இந்தியாவில் மண்ணுக்கு அடியில் ஏராளமாக இருந்த போதும் இன்னும் அவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
‘ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி’- அக்டோபர் 1 முதல் நடைமுறைப்படுத்த முடிவு!
ஏற்கனவே இருந்த அரசுகள் உரிய கொள்கை முடிவு எடுக்காதது தான், இதுபோன்ற நிலைக்கு காரணம் என மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.