Homeசெய்திகள்இந்தியாஆசிரியர்களுக்கான பணி மீண்டும் கிடைக்க அரசின் தலையீடு வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கான பணி மீண்டும் கிடைக்க அரசின் தலையீடு வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்

-

- Advertisement -

24,000 ஆசிரியர்கள் பணி நீக்கம்; குடியரசு தலைவர் உடனடியாக தலையிட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆசிரியர்களுக்கான பணி மீண்டும் கிடைக்க அரசின் தலையீடு வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்

மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 24 ஆயிரம் ஆசிரியர்கள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டதை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 24 ஆயிரம் ஆசிரியர்கள் வேலையில்லாமல், உள்ள நிலையில் இவ்விவகாரத்தில் குடியரசு தலைவர் தலையிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களும், நியாயமற்ற வழியில் தேர்வு செய்யப்பட்ட கறைபடிந்த ஆசிரியர்களும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் வேலை இழந்துள்ளனர்.

ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பின் போது செய்யப்படும் எந்த ஒரு குற்றமும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் நியாயமான முறையில் தேர்வான ஆசிரியர்களின் வேலையும் பறிக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு அநீதியை ஏற்படுத்தக்கூடியது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும், நியாயமான முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களும் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் போதிய ஆசிரியர்கள் இன்றி லட்சக்கணக்கான மாணவர்கள் மேற்கு வங்கத்தில் தவித்து வருவதாகவும், மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களின் பணியை நம்பி இருந்த அவர்களின் குடும்பமும் தவித்து வருவதாக ராகுல் காந்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, முன்பு ஆசிரியராக பணியாற்றியுள்ள குடியரசுத் தலைவர் அவர்கள், நியாயமான முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களுக்கான பணி மீண்டும் கிடைக்க அரசின் தலையீடு வேண்டும் என கடிதத்தின் மூலம் வலியுறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு….வீடுகளுக்கு தேடிவந்த ஆப்பு

MUST READ