Homeசெய்திகள்இந்தியாஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

-

 

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
Photo: Governor Of Telangana

புதுச்சேரி மாநில துணைநிலை பொறுப்பு ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

கடந்த 1961- ஆம் ஆண்டு ஜூன் 02- ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் பிறந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை நன்றாகப் படித்து, உயர்கல்வியை சென்னையில் உள்ள புகழ்பெற்ற மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் தொடர்ந்தார். வெற்றிக்கரமாக மருத்துவப் படிப்பை முடித்த தமிழிசை சௌந்தரராஜன், உயர் மருத்துவப் படிப்பிற்காக வெளிநாட்டுக்குச் சென்றார். அங்கு சில ஆண்டுகள் படித்த பின் மீண்டும் நாடு திரும்பினார்.

கரூரில் 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, அவர் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார். அவருக்கு கட்சித் தலைமை, மாநில மருத்துவ அணியின் பொதுச்செயலாளர் பதவியை வழங்கிக் கௌரவித்தது. 2001- ஆம் ஆண்டு முதல் 2005- ஆம் ஆண்டு வரை அந்த பதவியை வகித்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், 2005- ஆம் ஆண்டு முதல் 2007- ஆம் ஆண்டு வரை மருத்துவ அணியின் அகில இந்திய இணை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

2007- ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், 2010- ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, 2013- ஆம் ஆண்டு முதல் 2014- ஆம் ஆண்டு வரை கட்சியின் தேசிய செயலாளராகவும், 2014- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16- ஆம் தேதி அன்று கட்சியின் மாநில தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை, தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைச் செய்திருந்தது. இதையடுத்து, டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனை ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8- ஆம் தேதி அன்று தெலுங்கானா மாநிலத்தின் இரண்டாவது ஆளுநராக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றுக் கொண்டார். அந்த மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.

சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழும் நமது வாழ்க்கை முறையை உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த நிலையில், 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுச்சேரி மாநில துணைநிலை பொறுப்பு ஆளுநராக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18- ஆம் தேதி அன்று புதுச்சேரி மாநில துணைநிலைப் பொறுப்பு ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இரண்டு மாநில ஆளுநர் பொறுப்புகளை வகிக்கும் முதல் பெண்மணி டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு எதிராக வரும் விமர்சனங்களை எளிமையாக கையாண்டு, எப்போதும் இன்ப முகத்துடன் இருப்பார் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.

MUST READ