
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூபாய் 315 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்பு
டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜூன் 28) காலை 11.00 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் சூழல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் அதில் நிறைவேற்றக் கூடிய சட்ட மசோதாக்கள் உள்ளிட்டவைக் குறித்து பிரதமர், மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது
அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு நேஷ்னல் மீடியா சென்டரில் (National Media Centre) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “2023- 2024 ஆம் ஆண்டிற்கான சர்க்கரை கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 305- லிருந்து ரூபாய் 315 ஆக உயர்த்தி பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆதரவு விலையை அதிகரித்ததன் மூலம் ஐந்து கோடி கரும்பு விவசாயிகள் பயனடைவர்” எனத் தெரிவித்துள்ளார்.