Homeசெய்திகள்இந்தியா"இந்தியாவில் 130 கோடி பேரிடம் ஆதார் அடையாள அட்டை"- மத்திய அரசு தகவல்!

“இந்தியாவில் 130 கோடி பேரிடம் ஆதார் அடையாள அட்டை”- மத்திய அரசு தகவல்!

-

- Advertisement -

 

இந்தியாவில் 130 கோடி பேர் ஆதார் அடையாள அட்டையை வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணி,புதை குழியாக மாறிய சாலை – பொதுமக்கள் அவதி

நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவை உறுப்பினர் விஷ்ணு தத் சர்மா, ஆதார் அடையாள அட்டைத் தொடர்பான கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த ஜூன் 30- ஆம் தேதி வரை 130 கோடியே 20 லட்சத்து 37 ஆயிரத்து 422 பேர் ஆதார் அடையாள அட்டையை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆவடி CRPF கபடி போட்டி 2023 – கோப்பையை வென்றது யார்?

அதிகபட்சமாக, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 21.84 கோடி பேர் ஆதார் அடையாள அட்டையை வைத்துள்ளனர். தமிழகத்தில் 7.42 கோடி பேர் ஆதார் அட்டையை வைத்துள்ளனர்.

MUST READ