இந்தியாவில் ஒரே நாளில் 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் நேற்று 2,151 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 40 சதவீதம் அதிகமாகும். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதிலிருந்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,30,862 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மூன்று, டெல்லியில் இருந்து இரண்டு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் எட்டு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளன்ர். கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நோய்த்தொற்று எண்ணிக்கை 0 ஆகக் குறைந்த டெல்லியில், கடந்த 24 மணி நேரத்தில் 300 வழக்குகள் பதிவாகியுள்ளன.