spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதிருப்பதியில்  இந்துகள் பணிபுரிய வேண்டும் என்பது சரியானது - வக்ஃப் வாரியத்தில் மட்டும் மற்ற மதத்தினரை...

திருப்பதியில்  இந்துகள் பணிபுரிய வேண்டும் என்பது சரியானது – வக்ஃப் வாரியத்தில் மட்டும் மற்ற மதத்தினரை எப்படி சேர்பீர்கள் ? ஓஐசி  ஆசாருதீன், எம்.பி. கேள்வி

-

- Advertisement -
kadalkanni

திருப்பதியில்  இந்துகள் பணிபுரிய வேண்டும் என்பது சரியானது - வக்ஃப் வாரியத்தில் மட்டும் மற்ற மதத்தினரை எப்படி சேர்பீர்கள் ? ஓஐசி  ஆசாருதீன், எம்.பி. கேள்வி

திருப்பதியில்  இந்துகள் பணிபுரிய வேண்டும் என்பது சரியானது ஆனால் வக்ஃப் வாரியத்தில் மட்டும் மற்ற மதத்தினரை எப்படி சேர்பீர்கள் ? என ஓஐசி  ஆசாருதீன், எம்.பி. கேள்வி

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் வேற்று மதத்தவர் அறங்காவலர் குழுவில் இடம் பெற வில்லை ஆனால் வக்ஃப் வாரியத்தில் மட்டும் எதற்காக வேற்று மதத்தவரை சேர்க்க வேண்டும்  என எம் ஐ எம் கட்சி தலைவர் எம்.பி. ஆசாருதீன் ஓஐசி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி.ஆர். நாயுடு திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மதத்தினர் பணிபுரியக்கூடாது , இதுகுறித்து அறங்காவலர் குழுவில் ஆய்வு செய்து அவர்களை வேறு துறைக்கு பணியிட மாற்றம் செய்வதா அல்லது எவ்வாறு வேற்று மதத்தினரை திருமலையில் பணி புரியாமல் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு எம் ஐ எம் கட்சி தலைவரும் எம்.பி.யுமான ஆசாருதீன் ஓவைசி கண்டித்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உள்ள 24 உறுப்பினர்களும் இந்துக்களாக இருக்க வேண்டும், அதேபோல் கோயிலில் பணிபுரிபவர்களில் வேற்று மதத்தினர் இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
அப்படியிருக்கையில் வக்ஃப் வாரியத்தில் பிற மதத்தினரை நியமிக்க எப்படி மசோதாக்கள் கொண்டு வர முடியும் ?

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் மட்டுமல்ல, பல இந்து அமைப்புகளிலும் பிற மதத்தினர் நுழைய வாய்ப்பில்லை. ஆனால் வக்ஃப் வாரியத்திலும், வக்ப் கவுன்சிலிலும் முஸ்லிம்கள் அல்லாத மற்ற மதத்தினரை ஏன் சேர்க்க நினைக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பத்திரப்பதிவு கட்டணம் இவ்வளவு உயர்வா? உடனே குறையுங்கள் – காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை

MUST READ