
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் முடிவடைந்துள்ளது. தேர்தலுக்கு பின்பாக தனியார் ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிழைப்பை நோக்கி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம்
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், Republic TV வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், பா.ஜ.க. 85 முதல் 100 இடங்களைப் பிடிக்கும் என்றும், காங்கிரஸ் 94 முதல் 108 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 32 இடங்களையும், பிற கட்சிகள் 2 முதல் 6 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், பா.ஜ.க. 62 முதல் 80 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சி 122 முதல் 140 தொகுதிகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 முதல் 25 தொகுதிகளையும், பிற கட்சிகள் 3 தொகுதிகள் வரையும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
TV 9 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் 99 முதல் 109 தொகுதிகளையும், பா.ஜ.க. 88 முதல் 98 தொகுதிகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 முதல் 26 தொகுதிகளையும், பிற கட்சிகள் 4 தொகுதிகளையும் வெல்லக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
C-Voter வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் 100 முதல் 112 தொகுதிகளையும், பா.ஜ.க. 83 முதல் 95 தொகுதிகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 முதல் 29 தொகுதிகளையும், பிற கட்சிகள் 2 முதல் 6 தொகுதிகளையும் வெல்ல வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி விடிய விடிய சோதனை
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற நிலையில், வரும் மே 13- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினமே முழுமையான முடிவுகள் வெளியாகும்.