
224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று (மே 10) காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

அமைச்சர் பதவியைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.. எங்கு தவறினார் நாசர்..
பாதுகாப்பு பணியில் 1 லட்சம் காவல்துறையினரும், தேர்தல் பணியில் 4 லட்சம் பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்களுக்காக 58,545 வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
கர்நாடகாவில் ஆண்கள் 2,430 பேர், பெண்கள் 185 பேர் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பா.ஜ.க. 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். இன்று பதிவாகும் வாக்குகளை மே 13- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
நட்சத்திர வேட்பாளர்கள் எங்கெங்கு போட்டி?
கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகோவன் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். வருனா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவும், கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
அஜித்- மகிழ் திருமேனி கூட்டணியின் ‘விடா முயற்சி’… அசத்தலான லேட்டஸ்ட் அப்டேட்!
கலபுரகி மாவட்டம், சித்தராபுரா தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி சன்னபட்னா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார்.