spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகர்நாடகாவில் காங்கிரஸ் அரசு எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால்கள்!

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால்கள்!

-

- Advertisement -

 

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால்கள்!
Photo: Karnataka Congress

கர்நாடகா மாநிலத்தில் புதிதாக பதவியேற்கும் காங்கிரஸ் அரசுக்கு உள்ள சவால்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

we-r-hiring

கர்நாடக முதலமைச்சர் யார்?- கட்சியின் தலைமைக்கு அதிகாரம் வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், புதிய அரசு முன் காத்திருக்கும் சவால்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

கடந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அப்போது, 25 தொகுதிகளை பா.ஜ.க. கைபப்ற்றி தனது செல்வாக்கை நிலைநாட்டியது.

எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. ஊழலற்ற மற்றும் திறமையான ஆட்சியை வழங்குவது இரண்டாவது முக்கிய சவாலாக உள்ளது. 40% கையூட்டு வாங்கும் ஆட்சி என பா.ஜ.க. அரசை சாடி, காங்கிரஸ் கட்சி பரப்புரையில் ஈடுபட்டது.

மரக்காணம் கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

பா.ஜ.க.வின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படும் நிலையில், அதேபோன்ற அவப்பெயர் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டால், மக்களவைத் தேர்தலில் மக்களவை தேர்தலில், மக்களின் ஆதரவு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஊழலைத் தடுத்து திறமையாக நிர்வாகம் நடத்தி, மக்களிடம் நற்பெயர் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மூன்றவதாக தேர்தல் பரப்புரையில் அறிவித்த, ஐந்து முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி விரைவாக நிறைவேற்ற வேண்டும். 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2,000 உதவித்தொகை, மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் 10 கிலோ அரிசி மாதந்தோறும் இலவசமாக வழங்கப்படும் என்ற ஐந்து வாக்குறுதிகள் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த சவால்களைத் திறம்பட எதிர்கொண்டால் மட்டுமே, புதிதாகப் பதவியேற்கவிருக்கும் காங்கிரஸ் அரசுக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

MUST READ