spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகேரளா படகு விபத்து- ரூ.10 லட்சம் நிதியுதவி

கேரளா படகு விபத்து- ரூ.10 லட்சம் நிதியுதவி

-

- Advertisement -

கேரளா படகு விபத்து- ரூ.10 லட்சம் நிதியுதவி

கேரளா படகு விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

താനൂർ ബോട്ടപകടം: മരിച്ചവരുടെ ആശ്രിതർക്ക് 10 ലക്ഷം രൂപ ധനസഹായം, ജുഡീഷ്യൽ  അന്വേഷണം പ്രഖ്യാപിച്ച് മുഖ്യമന്ത്രി | Breaking News from Kerala Districts  India and ...

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தாணுர் என்ற இடத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் சுற்றுலா படகு 35 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு காயலில் பயணித்துள்ளது. சிறிது தூரம் சென்றவுடன் திடீரென தலைக்குப்புற படகு கவிழ்ந்துள்ளது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணி மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் இருந்தது. உடனடியாக தகவல் தெரிந்தும் பொதுமக்களும் தீயணைப்பு துறையினரும், படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

we-r-hiring

35-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றார். இந்நிலையில் மலப்புரம் படகு விபத்தில் உயிரிழந்த 23 பேரின் குடும்பங்களுக்கு கேரள அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, திருரங்கடியில் உள்ள தாலுகா மருத்துவமனைக்குச் சென்று, படகு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்து நலம் விசாரித்தார்.

MUST READ