புகாரை கண்டுகொள்ளாத அதிகாரிகளின் இருக்கையில் பாம்பை விட்ட இளைஞர்
வெள்ளநீருடன் பாம்பு வீட்டுக்குள் வருவதாக புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஐதராபாத் மாநகராட்சி அலுவலகத்திற்கு பாம்பை கொண்டு வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த கனமழை காரணமாக அல்வால் பகுதியில் உள்ள சம்பத் குமார் என்ற இளைஞரின் வீட்டிற்குள் பாம்பு வெள்ள நீருடன் புகுந்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்து 6 மணி நேரத்திற்கு மேலாகியும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் பொறுமை இழந்த சம்பத்குமார் அல்வால், பகுதியில் உள்ள மாநகராடை வார்டு மண்டல அலுவலகத்திற்கு பாம்புடன் சென்றார்.
தெலங்கானா : மழை வெள்ளத்துடன் வீட்டிற்குள் பாம்பு வருவதாக புகாரளித்து நடவடிக்கை எடுக்காததால்
பாம்பை கொண்டு வந்து மாநகராட்சி அலுவலகத்தில் விட்ட இளைஞர்! pic.twitter.com/QABF7uxRiU
— Kovai nizar (@kovaimmk) July 26, 2023

அதிகாரிகளுக்கு புகார் அளித்தால் யாரும் வருவதில்லை, நடவடிக்கையும் எடுப்பதில்லை . எனவே இந்த பாம்பை நீங்களே வைத்து கொள்ளுங்கள்! என மேசை மீது பாம்பை வைத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.