Homeசெய்திகள்இந்தியாமணிப்பூர் கொடூரம் தொடர்பாக 4 பேர் கைது!

மணிப்பூர் கொடூரம் தொடர்பாக 4 பேர் கைது!

-

 

மணிப்பூர் கொடூரம் தொடர்பாக 4 பேர் கைது!
Twitter Image

மணிப்பூரில் நிகழ்ந்த கொடூர நிகழ்வு காரணமாக, நான்கு பேரை இதுவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகும் ‘லியோ’ டிரைலர்……. எப்போது தெரியுமா?

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், இரண்டு பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு, நாட்டையே உலுக்கியது. இதில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுவரை இதில் தொடர்புடைய, நான்கு பேரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள காவல்துறை, மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளது. மாநிலத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்த 129 இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் புதிய வெப் சீரிஸ்…… டீசர் ரிலீஸ் அப்டேட்!

வன்முறை தொடர்பாக, 657 பேரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ