spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி!

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி!

-

- Advertisement -

 

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி!
Photo: Union Minister Amitsha

மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த கலவரம் குறித்து அந்த மாநிலத்தின் அரசு அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

we-r-hiring

சாதனை படைத்த தோனி…..ஆரஞ்சு, ஊதா நிற தொப்பிகளைப் பெற்ற வீரர்கள் யார்?

மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்ட்டி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, குகி உள்ளிட்ட பழங்குடியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக அங்கு கலவரம் வெடித்த நிலையில், இம்பாலில் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்ததால், ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக, கொய்ராம்பண்ட் சந்தைக்கு (Khwairamband Market) வரும் மக்கள், தங்கள் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில், மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்திய நிலையில், மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

“உடல்நிலையைப் பொறுத்தே அடுத்த சீசன் குறித்து முடிவு எடுப்பேன்”- தோனி பேட்டி!

உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் தங்கு தடையில்லாமல் பொதுமக்களுக்கு சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதிச் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

MUST READ