“தமிழ் மொழி இந்தியர்களுடைய மொழி” – பிரதமர் மோடி
ஜப்பான், பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளின் பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி இன்று காலை நாடு திரும்பினார்.

டெல்லி பாலம் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்க பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா வியாழக்கிழமை காலை டெல்லி பாலம் விமான நிலையத்துக்குச் சென்றடைந்தார். பாஜக தேசியத் தலைவருடன் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டெல்லி எம்பி ரமேஷ் விதுரி ஆகியோர் இணைந்து பிரதமரை வரவேற்றனர்.


அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “தமிழ்மொழி நம்முடைய மொழி, உலகிலேயே மிக பழமையான மொழி தமிழ் மொழிதான். ஒவ்வொரு இந்தியரின் மொழி தமிழ். பப்புவா நியூ கினியில் எனக்கு திருக்குறள் மொழிப்பெயர்ப்பு நூலை வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது.நமது வாழ்க்கை முறைகள் வெவ்வேறாக இருந்தாலும், நாம் யோகா மூலம் இணைந்துள்ளோம்” என்றார்.


